அனர்த்த காலத்தில் அரங்கேறிய அப்பட்டமான பித்அத்

கடந்த வெள்ள அனர்த்தத்தின் போதும், அதனை அடுத்து வந்த சில நாட்களாகவும் எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட  சகோதரர்களின் தியாகமும், தன்னலமற்ற பணிகள் முன்மாதிரியானதும், இன்ஷா அழ்ழாஹ் நற்கூலியைப் பெற்றுத்தரக் கூடியதுமென்பதில் சந்தேகமில்லை.
அழ்ழாஹ்வின் அருளால் எம்மவர்களுக்கு அழ்ழாஹ் கொடுத்திருக்கும் சகோதரத்துவ உணர்வினால்  பல்வேறு வகையான நிவாரணப் பணிகளையும், அணர்த்தத்தின் பின்னரான உதவிப் பணிகளிலும் பல்வேறு அமைப்புக்களையும் சேர்ந்தவர்கள் இதய சுத்தியுடன் ஈடுபட்டனர்.சில போது மாற்று மத அன்பர்களுக்கும் இவ் அனுகூலங்கள் கிடைக்கப் பெற்றது வரவேற்கத்தது.அழ்ழாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக.
இச் சந்தர்ப்பத்தில் இவ் அணர்த்த காலத்தில் பலரும் கண்டு கொள்ளாத ஒரு தீமையைப் பற்றித்தான் நாம் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். அதுதான் தௌபா, திக்ர், பிரார்த்தனை என்ற பேரால் பள்ளி வாயல்களில் அரங்கேரிய அநியாயமான பித்அத்கள். கடந்த சனிக்கிழமை வரை சில நாட்களாக பள்ளிவாயல்களில் கூட்டாகவும், உயர்ந்த சப்தத்துடனும் ராதிபு மஜ்லிஸ்களும், அத்து மீறிய பிரார்த்தனைகளும் நடந்தேறி வந்தது யாவரும் அறிந்ததே.
அணர்த்தங்களிலிருந்தும், அழிவுகளிலிருந்தும் அழ்ழாஹ் ஒருவனால் மாத்திரம்தான் எம்மைக் காப்பாற்ற முடியுமென்ற உறுதியான நம்பிக்கையினாலேயே நாம் பள்ளிகளின்பால் விரைகிறோம். பிரார்த்தனை மேல் எமக்குள்ள அதிக பட்ச உறுதிப்பாடுதான், என்னதான் இழப்புகள் வந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்திலாவது துஆவில் மூழ்குகின்றோம். இதில் எம்மில் எவருக்கும் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.
وعن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يدعو بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث إما أن يعجل له دعوته وإما أن يدخرها له في الآخرة وإما أن يصرف عنه من السوء مثلها
“எந்த முஸ்லிமாவது பாவமோ, உறவை முறிக்கின்ற விடயமோ அன்றி அழ்ழாஹ்விடம் யாதேனும் ஒரு பிரார்த்தனையை வேண்டினால் அழ்ழாஹ் பின் வரும் மூன்றில் ஒரு வழியில் அவருக்கு அதை வழங்கிவிடுகிறான்.
1) அவரது பிராத்தனையை முன் கூட்டியே நிறைவேற்றிவிடுவது.
2) மறுமையில் வழங்குவதற்காக அழ்ழாஹ் சேமித்து வைப்பது.
3) அவரது பிராத்தனைக்கு நிகராக அதைப் போன்றதொரு தீங்கை அவரை விட்டும் திருப்பி விடுவது.” (அறிவிப்பவர்: அபூ சஈத் (ரழி), ஆதாரம்: அஹ்மத்)
“அவர்கள் அழ்ழாஹ்வுக்கு பணிந்து நடப்பதற்காக நோயாலும், வருமையாலும் பிடிக்கின்ரோம்.” (அல்குர்ஆன் 6:42)
“நபியே அவர்கள் உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் நான் சமீபமாக உள்ளேன், அழைப்பாளனின் அழைப்புக்கு பதிலழிக்கிறேன் என நீர் கூறும்.” (அல்குர்ஆன் 2:186)
“அவர்கள் வெட்கக் கேடான காரியத்தைச் செய்தாலோ, (வேறு பாவங்கள் செய்து) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ அழ்ழாஹ்வை ஞாபகம் செய்து தங்கள் பாவங்களுக்காக அழ்ழாஹ்விடம் பிழை பொருக்கத் தேடுவார்கள். அழ்ழாஹ்வைத் தவிர பாவங்களை வேரு யார் மன்னிப்பது யார்? மேலும் அறிந்து கொண்டே அப் பாவங்களில் நிலைத்திருக்கவுமாட்டார்கள்.”(அல்குர்ஆன் 3:135)
மேற்படி வஹிச் செய்திகளிலிருந்து சிரமங்களின் போது அழ்ழாஹ்வை திக்ர் செய்வது, இஸ்திஹ்பார் மற்றும் பிரார்த்தனை செய்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு வணக்கமென்பது நிரூபனமாகின்றது. ஆனால் இத்தகைய இஸ்திஹ்பார் மற்றும் பிரார்த்தனை எவ்வாறு செய்ய வேண்டுமெனவும் குர்ஆன், சுன்னா எமக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்குகின்றது.
“உமதிறைவனை உனக்குள் பணிவாகவும், அச்சத்துடனும் சொல்லால் உயர்ந்த சப்தமில்லாமலும் திக்ர் செய்வாயாக, கவனமற்றவராக நீர் இராதே.” (அல்குர்ஆன் 7:205)
“உங்கள் இறைவனை பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் வரம்பு மீறியோரை அழ்ழாஹ் நேசிக்கமாட்டான்.” (அல்குர்ஆன் 7:55)
திக்ர், துஆவிலும் கூட வரம்பு மீறுவதை அழ்ழாஹ் கண்டிக்கிறான். வருகிற ஆபத்துக்களை ஆன்மீக வழியில் எதிர்கொள்ளச் சென்று முறை தவறிச் செய்வதால் அதுவும் ஆபத்துதான் என்பதை எம்மவர்கள் புரியத்தவறுவது கவலைக்குரியது.
கீளேயுள்ள ஹதீஸை அவதானமாகக் கவணிப்போம்
صحيح البخاري-ن – (1 / 97)
244 – حدثنا محمد بن مقاتل قال أخبرنا عبد الله قال أخبرنا سفيان عن منصور عن سعد بن عبيدة عن البراء بن عازب قال
: قال النبي صلى الله عليه و سلم ( إذا أتيت مضجعك فتوضأ وضوءك للصلاة ثم اضطجع على شقك الأيمن ثم قل اللهم أسلمت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجى منك إلا إليك اللهم آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت فإن مت من ليلتك فأنت على الفطرة واجعلهن آخر ما تتكلم به ) قال فرددتها على النبي صلى الله عليه و سلم فلما بلغت اللهم آمنت بكتابك الذي أنزلت قلت ورسولك قال ( لا ونبيك الذي أرسلت )
[ 5952 ، 5954 ، 5956 ، 7050 ]
[ ش أخرجه مسلم في الذكر والدعاء والتوبة باب ما يقول عند النوم وأخذ المضجع رقم 2710
( مضجعك ) فراشك ومكان نومك . ( ألجأت ) أسندت . ( رغبة ) طمعا في ثوابك . ( رهبة ) خوفا من عقابك . ( منجى ) مخلص . ( الفطرة ) الدين القويم وهو الإسلام الذي يولد عليه كل مولود . ( لا ونبيك ) أي لا تقل ورسولك بل قل ونبيك كما علمتك وفيه إشارة إلى التزام الألفاظ الواردة في الأدعية والأذكار ] . بسم الله الرحمن الرحيم
“நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்துகொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக்கொள். பின்னர் ‘யா அழ்ழாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்துவிட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அழ்ழாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ
தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று என்னிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன்.
அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்பதற்குப் பதிலாக ‘உன்னுடைய ரஸூலையும் நம்பினேன்’ என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீஅனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்” என பராவு இப்னு ஆஸிப்(ரழி) அறிவித்தார். (ஆதாரம்: புஹாரி-247)
‘நபி’ எனும் வார்த்தையை விட பொருள் நயம் கொண்ட ‘ரஸூல்’ எனும் வார்த்தையை தானாக மாற்றியமைப்பதற்கு நபிகளார் அனுமதியளிக்காததிலிருந்து திக்ர் எனும் வணக்கம் எவ்வளவு தூரம் வார்த்தைகள் கவனமாகக் கையாளப்பட வேண்டுமென்பது தெளிவாகிறது.
துஆக்களிலும், திக்ருகளிலும் (வாரிதாக) வந்த வார்த்தைகளையே கையாள வேண்டுமென்பது அவசியமானது என்ற விளக்கவுரையின் மொழிபெயர்ப்பே சிகப்பு எழுத்தில் தரப்பட்டுள்ளது.
நேர காலத்தை ஒதுக்கி நன்மைகளை செய்ய ஆசைப்படும் நாங்கள் அதனை அழ்ழாஹ்வும் அனது தூதரும் காட்டித் தந்த முறையில் செய்யத் தவருமிடத்து அது குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதையாகிவிடும். ஆழ்ழாஹ் நம் அனைவரையும் நேரான வழியின்பால் நிலைத்திருக்கச் செய்வானாக.