இணைவைப்பின் மறுபெயர் சுப்ஹான மவ்லித்


அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனி டம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 23:117)
எமது பகுதிகளில் ஓதிவரும் சுப்ஹான மவ்லித்
தில் இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்பு கருத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது என்பதை தக்க சான்றுகளுடன் ஒரு நோட்டீஸ் நாம் வெளிட்டோம். இதைக் கண்டு கொதித்து போனவர்கள். இதற்கு பதில் என்ற பெயரில் எதையாவது கிறுக்காவிட்டால் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் மவ்லித் மொத்தமாக மவ்த் ஆகி பாத்திஹா ஓத வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்ற எண்ணி பதில் என்ற பெயரில் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு என்ற பெயரில் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் உண்மையான கருத்துக்களை புறம்தள்ளிவிட்டு தன் மனோஇச்சையின்படி மனம்போன போக்கில் விளக்கம் அளித்துள்ளனர். அவர்களின் உளறல் களுக்கு விளக்கம் இதோ :

பாவங்களை மன்னிப்பவன் யார்?
பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !
கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !
என்ற மவ்லித் வரிகள்
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?
(அல்குர்ஆன் 3:135)
என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு முரணாக உள்ளது என்று எழுதியிருந்தோம்.
அவர்களின் உளறல் :
நமது பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் காரணமாகத் திகழ்கிறார்கள். ஆதாரம் :
அல்லாஹ் கூறுகின்றான் "நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்து விட்டு உம்மிடம் வந்து அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பைத் தேடி , அவர்களுக்காக (தூதராகிய ) நீரும் பாவமன்னிப்பை கோரினால் , பாவமன்னிப்பை ஏற்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும்
அல்லாஹ்வை பெறுவார்கள்.'' (அல் குர்ஆன் 4:64)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ,"நான் அழிப்பவன் . அல்லாஹ் என்னைக் கொண்டு (பெரும் பாவமாகிய ) இறை மறுப்பை அழிக்கின்றான் .
(புகாரி : 4896) என்று எழுதியுள்ளனர்.
உண்மை விளக்கம் :
இவர்கள் காட்டிய அந்த திருக்குர்ஆன் வசனத்திலும்கூட நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும் என்றும் அல்லாஹ்தான் பாவங்களை மன்னிப்பான் என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் மவ்லித்
வரிகள், நபி (ஸல்) அவர்களை நோக்கி நீங்கள்தான் பாவங்களை மன்னிப்பவர், என்றும் அழிவேற்படுத்தும் பாவங்களைகூட மன்னிப்பவர் நீங்கள்தான் என்று கூறியிருப்பதும் ஒன்றா?
நபி (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிப்பதற்கு காரணமாக இருப்பவர் என்றால் மவ்லித் வரிகளில் பாவங்களை மன்னிப்பதற்கு காரணமாக இருப்பவரே என்றல்லாவா இருந்திருக்கவேண்டும். ஏன் நீங்கள்தான் பாவங்களை மன்னிப்பவர் என்று கூறவேண்டும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள், பாவம் செய்து விட்டு தாமும் மன்னிப்புக் கேட்டு நபிகள் நாயகமும் அல்லாஹ்விடம் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பான் என்று தான் இவ்வசனம் கூறுகிறதே தவிர அவர்களிடம் பாவமன்னிப்பு தேடுங்கள் என்று கூறவில்லை. அவர்களிடம்தான் நாம் பாவமன்னிப்பு தேடவேண்டும் என்று கூறினால் ஒவ்வொரு பாவம் செய்தவுடன் மதீனா சென்று விட்டு வர வேண்டும். இவர்களின் வாதப்படி பெரிய செல்வந்தர்களுக்கு மட்டும் தான் மன்னிப்புக் கிடைக்கும். மதீனா செல்ல முடியாத ஏழைகளுக்குக் கிடைக்காது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது, அவர்களே அல்லாஹ்விடம் அம்மக்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும் போது இறைவன் மன்னிக்க அதிக வாய்ப்பு உண்டு என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை.
நபிகள் நாயகத்தின் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் ஒவ்வொரு பாவம் செய்யும் போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் சென்று தமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்குமாறு வேண்டவில்லை என்பதைப் புரிந்து கொண்டால் குழம்ப மாட்டார்கள்.
இரண்டாவதாக அவர்கள் கூறிய புகாரி 4896 ஹதீஸில் அழிப்பவர் என்று இடம்பெற்றிருக்கும் செய்தியில் அவர்கள் எதை அழிப்பார்கள்? என்ற கேள்விக்கு அடுத்தாக இறைமறுப்பை அழிப்பவர் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் கூறிய பிறகும் மனஇச்சைப்படி நபிகளார் பாவங்களை மன்னிப்பார்கள் என்று இந்த நபிமொழியை ஆதாரம் காட்டுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ளட்டும்.
பாதுகாவலன் யார்?
மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்
என்று மவ்லித்வரிகள்
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ,
உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?
(அல்குர்ஆன் 2:107)
என்ற வசனத்திற்கு நேர் எதிராக உள்ளது என்று நாம் கூறியதற்கு
அவர்களின் உளறல் :
அல்லாஹ்வே அடிப்படையில் பாதுகாவலன் என்பதில் எவ்வித சந்தேகமும் - தர்க்கமும் இல்லை . அதன் காரணிகளாக நல்லோர்கள் திகழ்கிறார்கள் என்பது குர்ஆன் ஹதிஸ் கூறும் உண்மை .
ஆதாரம் :
அல்லாஹ் கூறுகிறான் ,"(நபியவர்களே!) நீர் அவர்களுடன் இருக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களை தண்டிப்பவனாக இல்லை .''
(அல் குர்ஆன் 8:33)
உண்மை விளக்கம் :
மெய்யான படைப்புகளுக்கொல்லாம் மெய்காவல் தாங்கள் என்ற வரிகளின் கருத்து என்ன? உண்மையான காவல்காப்பவர் நபி (ஸல்) அவர்கள்தான் என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.
அப்படியானால் அல்லாஹ் யார்? அவன் உண்மையான பாதுகாவலன் இல்லையா? அல்லது இரண்டாம் நிலை பாதுகாவலனா?
8:33 வசனத்தில் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது உள்ள நிலையை விளக்கப்படுகிறது. அவர்கள் உயிருடன் எங்கு இருப்பார்களோ அங்குதான் அந்த மக்களை ஒட்டுமொத்தமாக அல்லாஹ் அழிக்கமாட்டான். ஆனால் இன்று நபிகளார் உயிருடன் இருக்காத காலகட்டத்தில் மெய்யான படைப்புகளுக்கொல்லாம் மெய்காவல் என்று நபிகளாரை கூறுவது அபத்தமாக இல்லையா?
படைத்த இறைவனைவிட கூடுதலாக மிகைப்படுத்தி நபிகளார் மீது இட்டுகட்டிக் கூறிய கடும் இணைவைப்பு சொல் இல்லையா?
படைப்புகளை பாதுகாப்பும் காரணியாக திகழ்கிறார்கள் என்று நீங்கள் கூறினால் நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு காரணியாக திகழ்கிறார்கள் என்றல்லவா மவ்லித் வரிகள் இருந்திருக்கு வேண்டும்? மெய்யான படைப்புகளுக்கெல்லாம் மெய்காவல் தாங்கள் தான் என்று அல்லாஹ்வுடைய இடத்தில் வைத்து எப்படி அழைக்கலாம்? இது அப்பட்டமான இணைவைப்பு இல்லையா?
நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுபவர் யார்?
வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி (ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக. என்ற மவ்லித் வரிகள் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்திற்கு எதிராக உள்ளது என்று எழுதியிருந்தோம்.
"எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிருந்து
எங்களைக் காப்பாயாக!'' என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர்.
(அல்குர்ஆன் 2:201)
அவர்களின் உளறல் :
1. நிரந்தர நரகத்தில் சேர்க்கும் இறை மறுப்பிருந்து மக்களை நபி (ஸல்) அவர்கள் காப்பாற்றினார்கள்.
2. மறுமையில் நரகத்தில் செல்லும் முஃமின்களை பெருமானார் (ஸல்) அவர்களின் பரிந்துரையினால் சுவனம் புகுவார்கள்.
ஆதாரம் -1 : அல்லாஹ் கூறுகிறான் , "நிச்சயமாக நீங்கள் நேரான பாதையின பால் மக்களை அழைப்பவராக இருக்கிறீர்கள் ''
(அல்குர்ஆன் 42 : 52)
விளக்கம் :
நேரான பாதைக்கு மக்களை அழைப்பதன் மூலம் நரகத்திலிருந்து
அவர்களை பாதுகாக்கிறார்கள்.
ஆதாரம்-2; "நீங்கள் (நரக) நெருப்பில் விழுவதிருந்து
உங்களை நான் பிடித்துக் கொள்கிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்
2/248)
ஆதாரம்-3; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் அருளாலும் எனது பரிந்துரையாலும் நரகத்தில் கரிந்து போனவர்கள் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள்''. (ஹாகிம்)
உண்மை விளக்கம்
திருக்குர்ஆன் வசனம், நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பும் அதிகாரம் பெற்றவன் அல்லாஹ் ஒருவனே என்று தெளிவாக கூறியுள்ளது. மேலும் நபி (ஸல்) அவர்களே நரக நெருப்பிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று அல்லாஹ்வை நோக்கி கூறியுள்ளார்கள் (புகாரி 1377) மேலும் தன் தோழர்களையும் நரக வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோர கட்டளையிட்டுள்ளார்கள்.(முஸ்லிம்5216) இதுபோன்ற ஏராளமான சான்றுகள் அல்லாஹ் மட்டுமே நரகவேதனையிலிருந்து
காக்கமுடியும் என்றிருக்கும் போது நபிகளாரை நோக்கி எப்படி நரக நெருப்பிலிருந்து மக்களை காப்பாற்றுபவர் என்று கூறமுடியும்?
நபி (ஸல்) அவர்கள் சிலரை (அனைவரையும் அல்ல) நரகத்திலிருந்து தங்கள் பரிந்துரையால் சொர்க்கத்திற்கு கொண்டு செல்வார்கள் என்பதால் அவர்களைப் பார்த்து வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோர் என்று கூறுகிறோம் என்றால் முஃமின்கள் கூட சிலரை நரநெருப்பிலிருந்து காப்பாற்றுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 302)  எனவே முஃமின்கள் அனைவரையும் பார்த்து வாட்டு நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுபவர்களே என்று இந்த மவ்லித் பிரியர்கள் அழைப்பார்களா?

பரிந்துரைகூட அல்லாஹ் அனுமதித்த நபர்களுக்கும் மட்டுமே செய்ய முடியும்.
அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும் பயனளிக்காது. (அல்குர்ஆன் 20:109)
நேரான பாதைக்கு மக்களை அழைப்பதன் மூலம் நரகத்திலிருந்து
அவர்களை பாதுகாக்கிறார்கள். என்ற பெரிய தத்துவத்தையும் உதிர்த்துள் ளார்கள். இன்று எத்தனையோ அறிஞர்கள் நேரான பாதைக்கு மக்களை அழைக்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்த்து வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோர் என்று இந்த மவ்லித் பிரியர்கள் அழைப்பார்களா?
யார் மீது சத்தியம் செய்யலாம்?
அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : அபூதாவூத் 2829) சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)
என்ற நபிமொழிகளுக்கு பின்வரும் மவ்லித் வரிகள் முரணாக உள்ளது என்று சுட்டிக்காட்டினோம்.
நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.
அவர்களின் உளறல் :
ஜைனப் (ரலி) அவர்களின் மகன் இறந்த பொழுது கூறினார்கள் ,நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் மீது சத்தியமிட்டு நான் கூறுகிறேன் நபியவர்கள் (ஜனாஸாவிற்கு) வரவேண்டும்.'' (புகாரி :1284)
உண்மை விளக்கம் :
நாம் காட்டிய எந்த நபிமொழிகளுக்கு பதிலளிக்காமல் புகாரியில் 1284 வது இடம்பெறும் செய்தியை ஆதாரமாக காட்டியுள்ளார்கள்.
இந்த செய்தியில் துக்ஸிமு அலைஹி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதற்கு நேரடி பொருள் அவன் மீது சத்தியம் செய்கிறார் என்பது நேரடிப் பொருள். இதில் அவன் என்ற பிரதிப்பெயர்ச் சொல் நபி (ஸல்) அவர்களை குறிப்பதாக இவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.
சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் மொழிபெயர்த்து, சுன்னத் ஜமாஅத் ஆலிம்களால் சரிபார்க்கப்பட்ட ரஹ்மத் அறக்கட்டளை வெளியிடான ஸஹீஹுல் புகாரி மொழிபெயர்ப்பில் அல்லாஹ் மீது ஆணையிட்டு கூறினார்கள் என்றே மொழிபெயர்ப்பப்பட்டுள்ளது.
இதே செய்தி புகாரியில் 5655, 6655, 7377, 7448 ஆகிய எண்களிலும் இடம் பெற்றுள்ளது. அனைத்து இடத்திலும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு என்றே மொழிபெயர்த்துள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்க.
ஒரு பேச்சுக்கு இவர்கள் சொன்னபடி நபி (ஸல்) அவர்கள் மீது ஜைனப் (ரலி) சத்தியமிட்டு கூறினார்கள் என்று சொன்னாலும் இது ஆரம்ப காலத்தில் நடந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை தவிர மற்றவர்கள் மீது சத்தியம் செய்யக்கூடாது என்று கூறுவதற்கு முன்னர் இது போன்று சத்தியம் செய்துள்ளார்கள் என்பதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் உள்ளன.
ஒரு யூதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் இணைக் கடவுள்களை ஏற்படுத்துகின்றீர்கள். நீங்கள் இணைகற்பிக்கின்றீர்கள்.
(அதாவது) நீங்கள் அல்லாஹ்வும் நீங்களும் நாடியது நடந்து (என்று இறைநாட்டத்திற்கு சமமாக மனித நாட்டத்தை இணைத்துக்) கூறுகின்றீர்கள். இன்னும் கஅபாவின் மீது சத்தியமாக என்றும் கூறுகின்றீர்கள் என்று கூறினார். உடனே நபியவர்கள் (ஸஹாபாக்களாகிய) அவர்களுக்கு சத்தியம் செய்யும் போது கஅபாவின் இரட்சகன் மீது சத்தியமாக என்று கூறவேண்டும் என்றும், அல்லாஹ் நாடினான் பிறகு நீங்கள் நாடியது நடந்தது என்ற கூறவேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.
நூல் : நஸாயீ (3713)
நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை தடைசெய்து அது ர்க் என்று கடுமையாக எச்சரிக்கை செய்த பின்னர் அந்த நபியின் மீதே சத்தியம் செய்வது எவ்வளவு திமிறுத்தனம் என்பதை பொது மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் காலத்திலும், நபித்தோழர்கள் காலத்திலும் ஏன் நான்கு இமாம்கள் காலத்திலும் இல்லாத இந்த சுப்ஹான மவ்லிதை ஏன் தூக்கிப் பிடிகிறார்கள் சிலர். தீனுக்கா? தீனிக்கா?
மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.' அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார்,மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.
ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார்.
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்த் பக்கம் : 13)
ஏப்ரல் தீன்குலப் பெண்மணி - 2011
Onlinepj.com